Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம்... -மாஜிக்களின் கட்சி பதவியை பறித்த ஜெயலலிதா!


அ.தி.மு.க.வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்களை செய்தும், பல மாஜி அமைச்சர்களின் கட்சி பதவிகளை பறித்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா.

இது குறித்து அ.தி.மு.க. கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதன்படி,

புதிய நிர்வாகிகள்...

அ.தி.மு.க. அவைத்தலைவர் - மதுசூதனன்
பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம்
கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை
அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன்
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் - எடப்பாடி பழனிச்சாமி
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் - தமிழ்மகன் உசேன்
சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் - ஜஸ்டின் செல்வராஜ்
ஜெயலலிதா பேரவை செயலாளர் - அமைச்சர் உதயகுமார்
தேர்தல் பிரிவு செயலாளர் - பொள்ளாச்சி ஜெயராமன்
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் - சின்னசாமி
அ.தி.மு.க., மருத்துவ அணி செயலாளர் - டாக்டர் வேணுகோபால்

மாவட்ட செயலாளர்கள் மாற்றம்...

கன்னியாக்குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஏ.விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாராயண பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருந்த தர்மருக்கு பதிலாக அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும், திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு பதிலாக திண்டுக்கல் மேயர் மருதராஜ் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேனி மாவட்ட செயலாளராக தங்க தமிழ்ச் செல்வன், கரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி கே.மோகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எஸ்.ஆறுமுகம், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி.பி.கலைராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்தி தொடர்பாளர்கள்...

பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, நாஞ்சில் சம்பத், கோ.சமரசம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், வைகை செல்வன், சி.ஆர்.சரஸ்வதி, க.பாண்டியராஜன், நிர்மலா பெரியசாமி ஆகிய 11 பேர் கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாஜிக்கள் பதவி பறிப்பு...
நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், தோப்பு வெங்கடாசலம், முக்கூர் சுப்ரமணியம், வி.பி.சுப்பிரமணி, ரா.குமரகுரு எம்.எல்.ஏ., உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒழுங்கு நடவடிக்கை குழு, மனுக்கள் பரிசீலனை குழு, 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட தொகுதி செயலாளர் உள்ளிட்ட அமைப்புக்களும் கலைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.