தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சுற்றி கடந்த சில நாட்களாக நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுகின்றனர் உடன்பிறப்புகள். ' வயோதிகம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு மட்டுமன்றி, மனச் சோர்விலும் தலைவர் இருக்கிறார்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை கட்சிக்காரர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து மகிழ்ந்தனர். இதன்பிறகு, ' கடந்த சில நாட்களாக அவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார்' என்ற தகவல்கள் வெளியாகின. நேற்று நடந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. இதுபற்றிப் பேசிய தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், ' உடல்நலமில்லாததால் தலைவரால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை' எனத் தெரிவித்தார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகி ஒருவர், "இன்றைக்கு சட்டசபையில் ஆளுநர் பங்கேற்கும் கூட்டத்திற்குச் செல்வது என்ற முடிவில் தலைவர் உறுதியாக இருந்தார். அதற்கேற்ப, சட்டமன்றத்தில் அவருக்கான இருக்கையும் தயார் செய்யப்பட்டது. 'சட்டமன்றத்தில் பங்கேற்றுப் பேச வேண்டும்' என மனதளவில் உறுதியாக இருந்தாலும், அவருடைய வயது அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. இதை அவர் உணர்ந்து கொள்ள மறுக்கிறார். 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வருவேன், பேசுவேன்' என அவர் பிடிவாதம் பிடித்தாலும், கடந்த சில நாட்களாக உடல் சோர்வில் இருக்கிறார்.
அவருடைய பிறந்த நாளன்று ஏராளமானவர்கள் திரண்டுவந்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் நோய்த் தொற்று ஏற்பட்டுவிட்டது. ' கும்பலாக இருக்கும் இடத்திற்குப் போகக் கூடாது' என மருத்துவர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் அவதிப்பட்டு வருகிறார். கூடவே, கால்வீக்கத்தால் அவதிப்பட்டு வருகிறார். ' இன்னும் இரண்டு நாட்களுக்கு யாரையும் சந்திக்க வேண்டாம்' என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதுதான் விஷயம். அதற்குள், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களால் தலைவர் மனச் சோர்வில் இருக்கிறார் என்று வதந்தி பரப்புகிறார்கள்.
குறிப்பாக, ராஜ்யசபா எம்.பி பதவியை ஆர்.எஸ்.பாரதிக்கும் இளங்கோவனுக்கும் கொடுத்ததில் முன்னணி நிர்வாகிகள் சிலருக்கு விருப்பமில்லை எனச் செய்தி பரப்புகிறார்கள். ' இவர்கள் இருவருக்கும் சீட் கொடுக்க வேண்டும்' என்பது ஸ்டாலின் உள்பட அனைவரின் விருப்பத்தோடுதான் நடந்தது. இதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. கூடவே கோவை வடக்கு, நாமக்கல், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் கட்சித் தொண்டர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சிதான். ' புதிய நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலினை கலந்து ஆலோசிக்கவில்லை' என செய்தி வெளியிட்டுவிட்டனர். இதில் எந்த உண்மையும் இல்லை. நிர்வாகிகள் மாற்றத்தால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். கட்சிக்குள் எந்தவித கலகமும் இல்லை. ஓரிரு நாட்களில் கட்சிக்காரர்களைத் தலைவர் சந்திப்பார்" என்றார் விரிவாகவே.
சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காத வருத்தத்தில் முன்னணி நிர்வாகிகள் சிலர் இருப்பதால், தலைவருடன் அதிருப்தி, மனத்தாங்கல் என மாறுபட்ட தகவல்கள் அரசியல் அரங்கில் வலம் வருகிறது. ' இன்னும் பல மாவட்டங்களில் தேர்தல் முறைகேடு விசாரணைப் படலம் இன்னமும் முடியவில்லை. அதன்பிறகு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும்போது கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்கள் வெளியாகலாம்' என்கின்றனர் உடன்பிறப்புகள் சிலர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.