Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2016

மீண்டு (ம்) கட்சிப் பொறுப்புக்கு வருகிறாரா திண்டுக்கல் சீனிவாசன் ? கலக்கத்தில் ஓ.பி.எஸ். அணி


கட்சிப் பொறுப்புகளில் எப்போதும், புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டே இருப்பதால் நேற்றைய ஜாம்பவான்கள் இன்று 'காலி'யாவதும், இன்றைய ஜாம்பவான்கள் நாளை காலியாவதும் அதிமுகவில் சாதாரணமாக நடக்கிற ஒன்றாகவே பார்க்க முடிகிறது .

இன்று  (13.06.2016) காலையில் இருந்தே கோட்டை வட்டாரத்திலும், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியிலும் பல மாவட்ட அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் அலை மோதிக் கிடக்கின்றனர். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நிர்வாகிகள் மாற்றம் வரவுள்ளதாக அடிக்கடி வந்து போகும் அலையின் தன்மை, கடந்த இரண்டு நாட்களாக பெரிதாக ஓங்கியடித்துக் கொண்டிருக்கிறது, இன்று இன்னமும் கூடுதல் அலை.

என்ன ஆவல் , என்ன எதிர்பார்ப்பு ? விசாரித்தோம்.


" கடந்த சனிக்கிழமை அன்று  கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் 38 பேருக்கு அம்மா  (முதல்வர். ஜெயலலிதா) அப்பாய்ன்ட்மென்ட் இருந்தது, அவர்களோடு புதிதாய் பொறுப்புக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள், பல மாவட்ட பிற அணி நிர்வாகிகள் என்று அனைவரும் கோட்டைக்கு வந்து அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

அப்படி அழைக்கப்பட்டவர்களில் கட்சியின் முக்கியப் பதவியான பொருளாளர் பதவி வகிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கப்படவில்லை. 'எங்க அண்ணனுக்கு மட்டும்தான் என்றில்லை, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனுக்கும் அன்று அம்மா, அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கவில்லை' என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வெளியில் பேசி வருகிறார்கள்.

உண்மை அதுவல்ல, 2001-06-களில் கட்சியில் பொருளாளர் பொறுப்பு வகித்து வந்த  எங்கள் அண்ணனுக்கே  மீண்டும் பொருளாளர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. இத்தனை வருடங்களாக நாங்கள், எந்தப் பொறுப்பும் இல்லாமல் முடங்கிக் கிடந்தோம். இப்போது மீண்டு வந்திருக்கிறோம்... " என்கின்றனர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.