Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் தொடர்புண்டா?


கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்களுக்கும் தொடர்பு இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கெட்ட கொழுப்பு அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கு உதவுவதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா, ஜப்பான், ஸ்வீடன், லண்டன், அயர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள பல்கலை.,கள் இணைந்து கொழுப்புக்களுக்கும், இதய நோய்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வை நடத்தினர்.
இதில், கெட்ட கொழுப்புக்களுக்கும் இதய நோய்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது நீண்ட நாள் வாழ்வதற்கே உதவுகின்றன. இந்த கெட்ட கொழுப்புக்களும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும் போது தான் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது என தெரிய வந்துள்ளது.

மொத்தமாக நடத்தப்பட்ட 30 ஆய்வுகளில் 28 ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன. பலரும் நினைப்பது போன்று கொழுப்புகள் உடலுக்கு கேடு விளைவிப்பது இல்லலை.அதிகமான கொழுப்புக்களுக்கும் அனைத்து வகையான இதய நோய்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கெட்ட கொழுப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் ஆகியவற்றின் அளவு, வாழ்க்கை முறைகள், காலநிலைகள், பயன்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களிடமே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.