Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா?


நயன்தாராவுக்கு 6 விரல்களாமே... அதான் அதிர்ஷ்டம் கொட்டுது...’ என ஆறாவது விரலை அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறவர்கள் பலர். இயற்கைக்கு மாறாக சிலருக்கு இருக்கும் ஆறாவது விரலின் அறிவியல் பின்னணி என்ன? அதற்கும் உணர்வு உண்டா?  விவரிக்கிறார்... குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி.

“குழந்தைகளுக்கு கை, கால்களில் தலா 5 விரல்கள் இருக்க வேண்டும். இயல்புக்கு மாறாக சில குழந்தைகளுக்கு  ஒன்றிரண்டு விரல்கள் அதிகமாகக் காணப்படும். கிரேக்க மொழியில் இதனை Polydactyly என்று குறிப்பிடுவார்கள். இதற்கு ‘நிறைய’ என்று அர்த்தம். 500 குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோல கை மற்றும் கால்களில் 6 விரல்கள் முளைக்கின்றன. கூடுதல் விரல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நிறைய வகைகள் உள்ளன.

கட்டை விரலுக்குப் பக்கவாட்டில் இருப்பதை Radial Variety எனக் குறிப்பிடுவார்கள். சில குழந்தைகளுக்கு விரல்களுக்கு நடுவே கூடுதல் விரல் இருக்கும். இதற்கு Central Variety என்று பெயர். சுண்டு விரலையொட்டி முளைத்திருந்தால் Ulnar Variety. ஆயிரம் குழந்தைகளில் இரு குழந்தைகளே இப்படிப் பிறக்கின்றன. கருவில் உள்ள குழந்தையின் ஆரம்ப நிலையிலேயே இந்த குறை இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. சிசு ஓரளவு வளர்ந்தபின் ஸ்கேன் எடுப்பது மூலமாக உறுதி செய்ய முடியும்.

இத்தகைய குறைபாட்டுக்கு மரபணு காரணங்களும் உண்டு. கூடுதலாக வளர்ந்துள்ள விரலால் அழகு கெடுவதாக நினைத்து, அறுவை சிகிச்சை செய்பவர்கள் இருக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. மிகவும் அவசியம் எனில், குழந்தை பிறந்த 15 மாதங்களுக்குள் இவ்விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். ஆறாம் விரலுக்கும் உணர்ச்சி உண்டு. எலும்பு மற்றும் நரம்புகள் சரியாக அமைந்து இருந்தால் மற்ற விரல்களைப் போலவே இதையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் எலும்பு இல்லாமல் வெறும் தசை வளர்ச்சி மட்டும் இருக்கும்.

எக்ஸ்ட்ரா விரல் உடைய குழந்தைகளுக்கு முகம் மற்றும் உதடு ஒழுங்காக அமையாமல் இருப்பது, இதயக் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறப்பு. மருத்துவர் ஆலோசனைப்படி, எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்து ஏதேனும்  பாதிப்பு  இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிகிச்சைகளையும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்...’’ 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.