Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 29, 2016

ட்ரீட் கேட்ட இன்ஸ்பெக்டரை, சிறைக்கு அனுப்பிவைத்த காவலர்!


உடன் பணிபுரியும் காவலரிடம் விடுப்பு மற்றும் ட்ரீட் அளிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 15-வது பட்டாலியனில் நாயக்காக பணியாற்றி வருபவர் திருமூர்த்தி. உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக பத்து நாட்கள் விடுமுறை தருமாறு தனது மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் இவர் கேட்டுள்ளார்.

அதற்கு ‘ விடுமுறை தரவேண்டுமானால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் என்ற வீதத்தில் 2 ஆயிரம்  ரூபாய் கொடுக்கவேண்டும்’ என்று  பன்னீர்செல்வம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு சமீபத்தில் நாயக்காக திருமூர்த்தி பதவி உயர்வு பெற்றார். அதற்கும் ட்ரீட் செலவுக்கு 500 கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கேட்டதாக தெரிகிறது.

இதனால் எரிச்சலான திருமூர்த்தி பன்னீர்செல்வத்திடம் பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில் இன்று ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு போய் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் கொடுத்தார்.



அதனை பன்னீர்செல்வம் வாங்கியபோது மறைந்திருந்த ஏடிஎஸ்பி பாலசுப்ரமணியன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீசார் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பெற்று கைதாகியிருப்பது மற்ற காவலர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.