Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

அன்று '250'; இன்று '5' : நெளிந்தது 'நிப்' தொழில்


அரசு மானியம் இல்லாததும், 'பால்பாயின்ட்' பேனா வருகையாலும், 250 க்கு மேல் செயல்பட்டு வந்த பேனா 'நிப்' தொழிற்சாலைகள், இன்று விரல் விட்டு எண்ணும் அளவில் குறைந்துள்ளன.

இதன் தொழிலாளர்களும் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேனாவில் தேய்மானம் என்பது அதன் 'நிப்' மட்டுமே என்பதால், அதை மாற்றினாலே பேனாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனால் ஒரு காலத்தில் பேனாவை விட 'நிப்' தேவை அதிகமாக இருந்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்துார், சுற்றுப்பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 250 க்கு மேற்பட்ட 'நிப்' தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. 2,500 க்கு மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தென்னந்திய அளவில் சாத்துாரில் மட்டுமே 'நிப்' தொழிற்சாலைகள் இருந்தன.

15 ஆண்டுகளாக பாதிப்பு : கடந்த 1960 ல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எவர்சில்வர் இறக்குமதி செய்யப்பட்டபோது, பேனா 'நிப்' தொழிலுக்கு மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கப்பட்டன. ஆனால் 15 ஆண்டுகளில் அந்த மானியமும் நிறுத்தப்பட்டது.

இதனிடையே கடந்த 15 ஆண்டுகளில் 'பால் பாயின்ட்' பேனாக்கள் வருகையால், மை ஊற்றி பயன்படுத்தும் பேனாக்களின் பயன்பாடு குறைய துவங்கியது. இதன் விளைவாக நிப் தயாரிப்பு தொழிலும் முடங்கியது. முன்பு 250 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்த சாத்துாரில், தற்போது 5 தொழிற்சாலைகளே 'நிப்' உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.