Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

தலையில் இருக்கும் "தலை'வன்!


உங்கள் தலையினுள்ளே, மண்டை ஓட்டின் பாதுகாப்பில் உள்ளது மூளை. வால்நட் பருப்பு போல சுருக்கங்களுடன் காணப்படும் மூளைதான் உங்கள் முழு உடலுக்கும் கட்டுப்பாட்டு மையம். உங்கள் இதயம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை, ரத்த நாளங்கள் வழியாக மூளைக்கு அனுப்புகிறது. 4 நிமிடங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கப்பெறாத நிலையில், மூளை செல்கள் இறக்க நேரிடும். அவற்றை புதிய செல்களாய் மாற்றி அமைக்க முடியாது. மூளை இரு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறான கட்டுப்பாட்டு செயல்கள் உண்டு.

"தல' கவனம்!
உங்கள் மூளைக்கு அடிபட்டு விடாமல் பாதுகாக்க விளையாடும் போது தலையில் ஹெல்மெட் அணிந்துதான் விளையாட வேண்டும்.

மூளைதான் மெயின் ஸ்விட்ச்!
ஜிளைதான் உடலின் மிக முக்கிய பகுதி. உங்கள் முழு உடலின் கட்டுப்பாட்டு மையம் அதுதான். ஆனால், அது அளவில் உங்கள் மூடிய இரு கையின் அளவினை விட சற்றே பெரிதாக இருக்கும். உடலின் பல உறுப்பு களில் இருந்து வரும் சமிக்கைகள், கண்-வாய்-காது மற்றும் தோல் ஆகியவை உங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

கிம் விளையாட்டு
ஏதாவது கற்கும்போது நாம் நினைவாற்றலின் துணையை நாடுகிறோம். இந்த விளையாட்டின் மூலம் உங்கள் நினைவாற்றலை சோதியுங்கள். வெவ்வேறு பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, சில நொடிகள் அவற்றை உற்று பாருங்கள். உங்கள் நண்பரிடம் ஏதாவது ஒரு பொருளை எடுத்து விட சொல்லுங்கள். அப்படி எடுக்கப்பட்ட பொருள் எது என்று கண்டுபிடித்து கூறுங்கள்.

வேலைக்கேற்ற மூளை!
பூராணிகளுக்கு அது செய்யும் செயல்களுக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் மூளை அமைந்திருக்கும்.

மூளையின் சிக்னல்!
ஏதாவது பொருளை தொட நீங்கள் நினைத்தால், ஒரு சிக்னல் உங்கள் மூளையிலிருந்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. ரிலே ரேஸில் ஒரு ஓட்டக்காரர் கையிலிருந்து மற்ற ஓட்டக்காரருக்கு கம்பு கைமாறுவதுபோல. முதலில் சிக்னல் முதுகுதண்டு நரம்புகளுக்கு சென்று, பின் மோட்டார் நரம்புகளுக்கு அனுப்பப்பட்டு, அது தசைகளை இயங்குமாறு செய்கிறது.

மார்ச் பாஸ்ட்!
இந்த இரு பெரிய மூளை படங்களில் சொல்லப்பட்ட இயக்கங்கள் வலது-கை பழக்க மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும். இடது-கை பழக்க மனிதர்களுக்கு இவை வலது இடதாகவும், இடது வலதாகவும் அப்படியே மாறிவிடும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.