Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

தலையை எடுத்துகிட்டு போகச்சொல்!-நகைச்சுவை சிறுகதை


சிந்தியாபுரம் என்ற ஊரில் சற்குணம் என்பவன் வசித்து வந்தான். அவனது ஊரில் ஒரு முக்கிய பணிக்காக நிதி வசூலிக்கும் பொறுப்பை அவனிடம் விட்டிருந்தனர் ஊர் மக்கள். அவன் புத்திசாலி என்பதால், அவனிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது.
ஒருநாள் சற்குணம் அவ்வூரிலிருந்த பெரிய பணக்காரர் ஒருவர் வீட்டிற்கு நிதி வசூலிப்பதற்காகச் சென்றார். அவர் வீட்டிற்குள் நுழையும்போது, ஜன்னல் வழியாக அந்தப் பணக்காரரின் தலை தெரிந்தது. இதை சற்குணம் பார்த்து விட்டார். ஆனால், அந்தப் பணக்காரரோ சற்குணம் தன் வீட்டிற்குள் நுழைந்ததைப் பார்க்கவில்லை.
உள்ளே சென்ற சற்குணம் வேலைக்காரனிடம் நிதி வசூலுக்காகத் தாம் வந்திருப்பதாகவும், அதை முதலாளியிடம் கூறுமாறும் வேண்டிக் கொண்டார்.
உள்ளே சென்ற வேலைக்காரன் சற்று நேரத்திற்கு பின் திரும்பி வந்தான்.
""ஐயா! எங்கள் முதலாளி வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்!'' என்றான்.
வேலைக்காரன் பொய் சொல்லுகிறான் என்று அறிந்து கொண்ட சற்குணம், ""சரி பாதகமில்லை. இன்னொரு முறை வரும்போது நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், அவர் வந்ததும் அவரிடம் ஒரு விஷயத்தை மட்டும் கூறிவிடு. நான் வீட்டிற்குள் நுழையும்போது ஜன்னல் வழியாக அவர் தலை தெரிந்தது. பாவம், அவர் அதை அங்கேயே வைத்து விட்டுப் போய்விட்டார் போலிருக்கிறது. இனி வெளியே செல்வதென்றால் தலையையும் அவருடன் மறக்காமல் எடுத்துச் செல்லச் சொல்!'' என்றார் சற்குணம்.
அறைக்குள் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பணக்காரனுக்கு அவமானமாகிவிட்டது. வெளியே வந்து சற்குணத்தை கூப்பிட்டு, அவர்கள் விரும்பிய பணத்தை நன்கொடையாக கொடுத்துஅனுப்பினான் பணக்காரன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.