Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதா..? -திட்டமிட்ட சதி என மறுக்கும் பிரகாஷ் ஜவடேகர்


இந்தியாவின் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ளதாக வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை பொய்யானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, ''இந்தியாவின் சுற்றுச்சூழல் தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு, சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவின் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ளது. இதனால், ஒவ்வோர் இந்தியரும் தனது வாழ்நாளில் 6 ஆண்டுகளை இழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். மேலும், அதில் நம்பகத்தன்மையும் இல்லை.

உலக நாடுகள் முழுவதும் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என்பதுதான் உண்மை. ஆனால், அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திட்டமிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் நிலக்கரி, 2ஜி என பல மோசடிகள் நடைபெற்றன. தற்போது, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நம்பகத்தன்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சியை நடத்தி வருகிறது.

மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி பெறுவதற்கு முன்பு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டது. தற்போது நூறு நாட்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்பு மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி என்பது பற்றாக்குறையாகவே இருந்து வந்தது. தற்போது, 21 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) 7.6 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதேபோல, அன்னிய நேரடி முதலீடும் அதிகரித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும். விவசாய உற்பத்தி மற்றும் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.