Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

கொடியிறக்கும் நிகழ்ச்சியில் இந்திய-பாக். வீரர்கள் கைகலப்பால் பரபரப்பு! (வீடியோ)


இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தினமும் நடக்கும் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.நேற்று (வியாழன்) நடந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களுக்குள் எதிர்பாராத விதமாக கைகலப்பு நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே உள்ள வாஹா எல்லைப் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான்  எல்லைக்கோடு  அமைந்துள்ளது. இங்கு தினமும் காலையில் இருநாட்டு வீரர்களும் கொடியேற்றி எல்லைக்  கதவைத் திறப்பதும், பின் மாலையில் கொடியை இறக்கி எல்லைக்  கதவை மூடுவதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலையும் வழக்கம்போல இருநாட்டு வீரர்களும் கொடியை முறைப்படி இறக்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட சிறிய மோதலைத் தொடர்ந்து, எதிர்பாராதவிதமாக இருநாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் கைகளால் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அந்தக் காட்சிகளை  பார்வையாளர் ஒருவர் தனது மொபைல் கேமிராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

அந்த வீடியோ இங்கே..


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.