Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

பாலியல் புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர் கைதாகவில்லை... பின்னர் வேறு யார்?


ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் குழுவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கடந்த இரு நாட்களாக வதந்தி நிலவி வந்தது.

இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வந்தது.  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது உண்மை வெளி வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் இந்தியர்தான். ஆனால், இந்திய கிரிக்கெட் அணிக்கும் அவருக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.

கைது செய்யப்பட்ட,  கிருஷ்ணா சத்யநாராயாணா என்பவர் ஜிம்பாப்வேயில் கன்சல்ட்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். ஹராரேவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச்சாக தேர்வு செய்யப்பட்ட ஜஸ்பிரீத் பும்ராவுக்கு செக்கை வழங்கியவர். இதனால்தான் இந்திய கிரிக்கெட் குழுவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விட்டதாக வெளியே செய்திகள் வரத் தொடங்கி விட்டது. 

இவருடன் சேர்த்து ஜாம்பியாவை சேர்ந்த மற்றொரு இந்திய தொழிலதிபரான ரவி கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஜிம்பாப்வே போலீஸ் உயரதிகாரி சரம்பா உறுதிபடுத்தியுள்ளார். தற்போது இருவரும் ஜாமீன் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.