Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

27 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல்: பாஜக 12-ஐ கைப்பற்றி அமோக வெற்றி


மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 27 இடங்களுக் காக நேற்று நடைபெற்ற தேர்த லில் பாஜக அதிகபட்சமாக 12 இடங்களில் வெற்றி பெற் றுள்ள து. காங்கிரஸுக்கு 6 இடங்களே கிடைத்தன.

15 மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 57 மாநிலங்க ளவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட் டனர். மற்ற 7 மாநிலங்களில் உள்ள 27 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்தந்த மாநில சட்டப்பேரவை வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஹரியாணாவில் 2 இடங் களுக்கு நடைபெற்ற தேர்தலில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சவுத்ரி வீரேந்திர சிங் மற்றும் பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரா ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட ஆர். கே.ஆனந்த் தோல்வி அடைந்தார். இங்கு 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்கு செல்லாது என அறிவித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கு 12 பேர் போட்டி யிட்டனர். இதில் ஆளும் சமாஜ் வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட அமர் சிங் மற்றும் வேணி பிரசாத் வர்மா உள்ளிட்ட 7 வேட்பாளர்க ளும் வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் வெற்றி பெற்றார். மாயாவதி தலைமை யிலான பகுஜன் சமாஜ் 2 இடங் களிலும் பாஜக, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடங்க ளிலும் வெற்றி பெற்றன.

கர்நாடகாவில் 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் கே.சி.ராமமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிஎம் பரூக் தோல்வி அடைந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் 3 இடங் களுக்கு 4 பேர் போட்டியிட்டனர். இதில் பாஜகவைச் சேர்ந்த எம். ஜே.அக்பர் மற்றும் அனில் மாதவ் தவே ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விவேக் தங்கா பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு டன் வெற்றி பெற்றார். வினோத் கோடியா (பாஜக) தோல்வி அடைந்தார்.

ராஜஸ்தானில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, கட்சியின் துணைத் தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர், ரிசர்வ் வங்கி முன்னாள் அதிகாரி ராம் குமார் சர்மா மற்றும் ஹர்ஷ்வர்தன் சிங் ஆகிய 4 பேரும் வெற்றி பெற் றனர்.

ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கு 3 பேர் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் மகேஷ் பொடார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

உத்தராகண்டில் ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற்ற தேர் தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் தம்டா வெற்றி பெற்றார். பாஜக ஆதர வுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அனில் கோயல் தோல்வி அடைந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.