நான் நிரபராதி என நிரூபித்து விரைவில் வெளியே வருவேன் என்று கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யுவராஜ் தெரிவித்து உள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். அப்போது கோகுல்ராஜை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது.
இதுதொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸூக்கு மாற்றப்பட்டது. அவர் தேடப்பட்டு வந்த நிலையில், வாட்ஸ் அப் மூலமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். பின்னர், அவராகவே போலீஸில் சரண் அடைந்ததால், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த யுவராஜ், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு நடந்து வரும் நாமக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த வேண்டும். அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும். அத்துடன், நெல்லையில் தங்கியிருந்து டவுன் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளையும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையோடு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்படி, ஜாமீன் பெற்ற யுவராஜ், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற இன்று நெல்லைக்கு வந்தார். காலையில் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று வாசலில் நின்றபடியே சாமி கும்பிட்ட யுவராஜ், அங்கிருந்து டவுன் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு கையெழுத்திட்ட அவர் தான் நாங்குநேரியில் ஒரு வீட்டில் தங்கியிருக்கப் போவதாக போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும், வெளியூரில் தங்கியிருந்தால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்பதால், நகரப்பகுதியில் தங்குமாறு அவருக்கு போலீசார் அறிவுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட யுவராஜ், ஒரு ஹோட்டலில் தங்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த யுவராஜ், ''கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்து கொண்டார். கோகுல்ராஜ் வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலைக்கு தூண்டப்பட்டார். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவங்களுக்குமான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறன. இதை உரிய நேரத்தில் வெளியே கொண்டு வருவேன்.
மேலும், அந்த ஆவணங்களை நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கோகுல்ராஜ் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதை நிரூபிப்பேன். அதேபோல், விஷ்ணுப்ரியாவுக்கு மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகளுக்கான ஆவணங்களையும் சமர்ப்பிப்பேன்.
நான் நிரபராதி என்பதை நிரூபித்து விரைவில் வெளியே வருவேன். தமிழக அரசு எனக்கு சிறப்பான வகையில் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அதற்காக நான் எனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நிரபராதி என நிரூபித்து இந்த ஊரில் இருந்து செல்வதற்கு முன்பாக உங்களிடம் நிறைய பேசுவேன். மூன்று மணி நேரத்துக்குகூட நான் பேட்டி கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று சிரித்தபடியே சொல்லிச் சென்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.