Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மாத்தி யோசி' டெக்னிக் இப்படிதான்!


" நாம செய்யாதன்னா அதைதான் செய்வாங்க‌ . இதை செய்ன்னு சொன்னா செய்யமாட்டாங்க‌. இதே வேலையா போச்சு..." ன்னு அலுத்துக்குற மம்மி டாடீஸ்... இதோ இனிமே மாத்தி யோச்சிச்சு குழந்தைகளை டீல் பண்ற‌ டெக்னிக் வந்தாச்சு...!

சூழ்நிலை 1

ரெண்டு குழந்தைங்க இருந்தா வீடே ஹரி படம் மாதிரி சண்டை, அடிதடி எல்லாம் நடக்கும்.
இப்போ அப்படி ரெண்டு குழந்தைங்க கார்ல போகும் போது சண்டை போட்டால்...?

சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :

" என்னங்க இவனுங்க ரெண்டு பேரும் ஜாக்கிச்சான் மருமகனுங்க மாதிரி சண்டைப் போட்டுட்டே இருக்கானுங்க . ஒரு ஓரமா வண்டிய நிறுத்துங்க. இவனுங்கள இறக்கி விட்டுட்டு நாம போவோம்."


மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" பசங்களா... கார ஓரமா அப்பாவ நிறுத்தச் சொல்லுறேன். நீங்க எப்போ அமைதியா ஒத்துமையா இருக்கீங்களோ... அப்போ நாம கிளம்பலாம்."

இதை ஊர் போற வரைக்கும் சொல்லிட்டே இருக்காதீங்க. பசங்க,  காமெடி பண்றோம்ன்னு நினைச்சுப்பாங்க. ஒரு தடவை மட்டும் முயற்சி பண்ணிப் பாருங்க . அடுத்த டோல்கேட் வரும்போது 'வானத்தைபோல' பிரதர்ஸ் மாதிரி மாறிடுவாங்க .

சூழ்நிலை 2 

குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கும் போது...


சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி:    

" உனக்கு கணக்கு வராதா.... இல்ல தெரியாம கேக்குறேன், உனக்கு கணக்கு வராதா... ? நானெல்லாம் அந்த காலத்துல டியூஷன் இல்லாம 100 க்கு 100 வாங்குவேன் .உனக்கு என்ன குறை ?"


மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" நீ மத்த எல்லா சப்ஜெக்ட்லயும் நல்ல மார்க் வாங்குற . கணக்குலேயும்  நீ முயற்சி பண்ணா வாங்க முடியும்.  உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு ? என்ன பண்ணா உன்னால நல்ல மார்க் வாங்க முடியும்ன்னு சொல்லும்மா ...!"

இப்படி கேளுங்க .


சூழ்நிலை  3 

குழந்தை சாப்பிடும் போது கீழே போடும், சில நேரத்துல நம்மக்கு வெச்ச குழம்பையும் கொட்டும்.


சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :   

" கொட்டிட்டியா... ? கொஞ்சம் நேரம் நான் உக்காந்தா உனக்கு பொறுக்காதே . உங்க அப்பா மாதிரியே எனக்கு ஏதாவது வேலை வைக்கணும் . உனக்கு சிந்துன்னு பேர் வெச்சேன். சதா சிந்திட்டே இருக்க. போ... துணி எடுத்துட்டு வா . என்ன பண்ணுறது எல்லாம் என் தலை எழுத்து ...!"

மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" ஆஹா .. சரி பரவாயில்ல...உன் மேல ஒண்ணும் எதுவும் கொட்டிடலேயே...? அம்மாக்கு கொஞ்சம் அந்த துணி எடுத்துட்டு வர்றியா... நான் துடைச்சிடுறேன்...!"



- இப்படி சொல்லுங்க எந்த குழந்தையா இருந்தாலும் அடுத்த தடவ சிந்தாம இருக்கணும்னு நினைக்கும்.


சூழ்நிலை  4 

குழந்தைங்க, பெத்தவங்கள எதிர்த்து பேசும் போது...

சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :  

"என்ன தைரியம் இருந்தா என்ன எதிர்த்து பேசுவ...?" - இப்படி சொல்லி அடிக்க கையை ஓங்குவது.

" அய்யயோ... என்ன எதிர்த்து பேசிட்டான்" னு ஊரையே கூப்பிடறது.

"என்ன எதிர்த்து பேசிட்டல்ல... இனிமே என்கூட பேசாத...!" -  இப்படி சொல்லுறது எல்லாமே தப்பு .


மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" நீ என்கிட்ட என்ன சொன்னாலும் அது சரியான விஷயமா இருந்தா மம்மி செய்வேன் . அதுவும் என்கிட்ட அமைதியா ஆசையா சொன்னா மட்டும்தான் .சத்தம் போட்டு , மிரட்டி பேசுனா எதையும் செய்யமாட்டேன்..."

இதை நீங்க குழந்தைங்ககிட்ட சொல்லும் போது சமுதாயத்துல குரலை உயர்த்தி பேசக்கூடாதுன்னு உணருவான் .

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.