Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

கும்ப்ளே பயிற்சியாளர் ஆன பின்னணியில் மூவர் கூட்டணி!


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்திருந்தனர். முதல் கட்டமாக 21 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். ஷார்ட் லிஸ்டில் கும்ப்ளே பெயர் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு ரவி சாஸ்திரிக்கு அதிகமாக இருந்துள்ளது. ஆனால் கும்ப்ளேவின் முன்னாள் டிரெஸ் ரூம் பார்ட்னர்கள், அவருக்காக சில உள்ளடி வேலைகளை செய்து இந்திய அணியின் பயிற்சியாளராக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அனில் கும்ப்ளே  விளையாடிய காலக்கட்டத்தில், அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் இல்லை, மிரட்ட வைக்குமளவுக்கு பீல்டிங்கில் ஈடுபட்டதும் இல்லை. ஆனால் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தார். ரவி சாஸ்திரி சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடந்த ஒரு வருட காலமாக இந்திய அணியின் இயக்குநராகவும் தற்காலிக பயிற்சியாளராகவும் இருந்த அனுபவம் பெற்றவர்.

கும்ப்ளேவை ஷார்ட் லிஸ்ட் செய்தால் அது பிசிசிஐ பேனலுக்கே தெரிந்து விடும். பிசிசிஐ கேட்ட இரு தகுதிகளுமே கும்ளேவிடம் இல்லை. முதல் தர அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனுபவம் வேண்டும்.  கும்ப்ளே எந்த அணிக்கும் பயிற்சியாளராக இருந்தவர் இல்லை. இரண்டாவது, பயிற்சியாளருக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதுவும் கும்ப்ளேவிடம் கிடையாது. இதனை கருத்தில் கொண்டுதான் மூவர் கூட்டணி,  கும்ப்ளேவை ஷார்ட் லிஸ்டில் தேர்வு செய்யவில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை கங்குலி தெளிவாக அனுராக் தாக்கூரிடம் கூறியுள்ளார். ''இந்த 21 பேரில் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால், வெளியே இருந்து நேர்காணலுக்கு கூப்பிட்டுக் கொள்ளுங்கள்'' என்று அட்வைஸ் போல சொல்லியிருந்தாராம். இதை வைத்துதான் அனில் கும்ப்ளே நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே '' இளம் வீரர்கள் நிறைந்த எங்களுக்கு ஒரு இளம் பயிற்சியாளர் கிடைத்தால் நல்லது'' எனக் கருதுவதாக டெஸ்ட் அணியின் கேப்டன்  விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதே வேளையில் ரவி சாஸ்திரிக்கும் கோலி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கோலியின் கருத்தும்,  மூவர் கூட்டணியின் உதவியும்தான் முக்கிய இரு தகுதிகள் இல்லாத நிலையிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16 வருடங்களாக  இந்திய அணிக்கு வெளிநாட்டுக்காரர்களே பயிற்சியாளராக இருந்து வந்திருக்கின்றனர். கபில்தேவுக்கு   பிறகு  இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்கும் இந்தியர் கும்ப்ளேதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.