Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

ஓசூர் அரசு அதிகாரி எரித்து கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளி, நாளை போலீசில் சரண் அடைவாரா?


ஓசூர் அரசு அதிகாரி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி நாளை போலீசில் சரண் அடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓசூர் திரிவேணி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குவளை செழியன் (வயது 42).

ஓசூர் நகராட்சியில் சர்வேயராக பணிபுரிந்த இவரை கடந்த 26-ந்தேதி ரூ. 50 லட்சம் கேட்டு ஒரு கும்பல் காரில் கடத்தியது. பின்னர் சேலம் மாவட்டம் தீவட்டி பட்டிப்பட்டி அருகே அவரை காருடன் எரித்து அந்த கும்பல் கொலை செய்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய ஓசூர் போலீசார் குவளை செழியனின் கள்ளக்காதலி கார்த்திகேயணி உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலத்தை சேர்ந்த இக்ரமுல்லா, அவரது நண்பர் கலைவாணன் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.

இதற்கிடையே இக்ரமுல்லா கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் குவளை செழியனை கொலை செய்ய சொன்னது யார்? யார் செய்தார்கள் போன்ற அனைத்து உண்மைகளும் எனக்கு தெரியும், இந்த கொலை வழக்கில் உண்மைகளை சொல்ல தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே கடந்த 7-ந்தேதி மீண்டும் இக்ரமுல்லா வெளியிட்டதாக ஒரு ஆடியோ வாட்ஸ்அப்பில் வெளியானது. அதில் நான் கிருஷ்ணகிரியில் டி.எஸ்.பி. கண்ணன் முன்னிலையில் வருகிற 10-ந்தேதி சரண் அடைய உள்ளேன். என்னுடைய சூழ்நிலை எப்படி இருக்குமென்று தெரியவில்லை.

வந்து சேரும் வரை உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. காவல் துறையினர் மீது எனக்கு கோபம் இல்லை. யாரை பார்த்தாலும் எனக்கு பயமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே இக்ரமுல்லா சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி அருகே வசித்து வரும் தனது 2-வது மனைவி வீட்டுக்கு வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அது தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வாட்ஸ்அப் ஆடியோவில் அறிவித்த படி நாளை (10-ந்தேதி) இக்ரமுல்லா போலீசில் சரண் அடைவாரா? என்று பரபரப்பு கிருஷ்ணகிரி போலீசாரிடையே தற்போதே ஏற்பட்டுள்ளது. அதனால் டி.எஸ்.பி. அலுவலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் அவர் சரண் அடைந்தால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் தற்போது இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.