பழங்காலத்தில் எல்லாம் நோய்களை சரிசெய்ய மூலிகைகள், வேர்களைக் கொண்டு பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தன. அப்படி நோய்களைப் போக்க பயன்படுத்தப்பட்டு வந்தவைகளுள் ஒன்று செம்பருத்தியின் இலை மற்றும் பூ. இந்த செம்பருத்தியில் சிவப்பு, வெள்ளை என்று இருந்தாலும், சிவப்பு நிற செம்பருத்தி தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்று பலரது வீடுகளில் இந்த செம்பருத்தி செடி இருக்கிறது. உங்கள் வீட்டிலும் செம்பருத்தி செடி இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். ஏனெனில் இது இன்று நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது. சரி, இப்போது செம்பருத்தி இலைகளைக் கொண்டு எந்த பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்ய முடியும் என்று பார்ப்போம்.
பாலியல் வாழ்க்கை மேம்படும்
நிச்சயம் இந்த நன்மை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் செம்பருத்தியின் இலை ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும். ஏனெனில் இதில் ஆண்களின் ஆன்ட்ரோஜென்களுக்கு இணையான உட்பொருள் உள்ளது.
கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
ஆய்வுகளில் செம்பருத்தி இலையின் 1 கிராம் சாற்றினை தினமும் உட்கொண்டால், உடல் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு வேகமாக குறையும் என தெரிய வந்துள்ளது.
எரிச்சல் கொண்ட குடல் நோய்
செம்பருத்தியின் இலையில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், உடலில் உள்ள நாள்பட்ட அழற்சியைப் போக்கும் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோயில் இருந்து விடுவிக்கும்.
காயங்கள் குணமாகும்
வெட்டுக் காயங்கள் வேகமாக குணமடைய செம்பருத்தி இலையின் சாற்றினை காயங்களின் மீது தடவினால், விரைவில் காயம் குணமாகும்.
இரத்த அழுத்தம் கட்டுப்படும்
செம்பருத்தி இலையின் சாறு இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
உடல் வலி குறையும்
5 செம்பருத்தி இலைகள் மற்றும் 5 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் போட்டு 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, 1/2 மணிநேரம் கழித்து பருக, உடல் வலி குறையும். அதிலும் இச்செயலை 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், 70% உடல் வலி முற்றிலும் நீங்கும்.
இரும்புச்சத்து குறைபாடு
இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பவர்கள், செம்பருத்திப் பூவின் இதழ்களை ஒரு டம்ளர் நீரில் போட்டு, நீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து 21 நாட்கள் பருகி வர, இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.