Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2016

அதிர்ச்சி வீடியோ! போட்டியின் போது தலைகீழாக வந்து தரையில் மோதிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை


ஆஸ்திரேலியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒலிவியா விவியன் (வயது 26). போட்டியின்போது இவரது தலை திடீரென தரையில் நேராக மோதியது.

ஜிம்னாஸ்டிக் விளையாட்டு என்பது கரணம் தப்பினால் மரணம் என்று பொதுவாக சொல்வார்கள். அதனை உறுதி செய்யும் வகையில், நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒலிவியா விவியன். இவர் கடந்த வாரம் ஆஸ்திரேலிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது போட்டியில் வெல்ல வேண்டும் என்ற வெற்றி வேட்கையில் பாரில் பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது டைவ் அடித்த ஒலிவியா, பாரை பிடிக்க தவற விட்டார். இதனால் அவர் தலை நேராக தரையில் பயங்கரமாக மோதியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பதறியடித்து அவரை தூக்கினார்கள்.

அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், கடுமையான காயம் ஏற்பட்டதால் போட்டியை விட்டு வெளியேறினார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் தாங்கிய வீடியோவை காணுங்கள்....




No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.