Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

விற்று தீர்த்த சகிலாவின் சுயசரிதை


சென்னையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் சுயசரிதை புத்தகங்கள் விற்பனையில் சகிலாவின் சுயசரிதை புத்தகம் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு சற்று கால தாமதமாக தொடங்கினாலும்   வழக்கம் போலவே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சுமார் 700 அரங்குகளி்ல் 10 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணகான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், ஒரு லட்சம் நூல்களும் இடம் பெற்றுள்ளன. பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

அமோகமாக நடைபெறும் புத்தக விற்பனையில் சுயசரிதை புத்தகங்களே அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. அதிலும் சகிலாவின் சுயசரிதை அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது.

இது மறுக்க முடியாத, அனைவரிடமும் சகிலாவின் மீதுள்ள ஆர்வத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.