Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

4ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட போர்ட்டர் பதவிக்கு 984 பட்டதாரிகள், 5 எம்.பில் படித்தவர்கள் விண்ணப்பம்


மகாராஷ்டிராவில் ஹமால் (போர்ட்டர்) பதவிகளுக்கு 984 பட்டதாரிகள் மற்றும் எம்.பில் படிப்பு முடித்த 5 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இந்த பதவிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி 4ம் வகுப்பு தேர்ச்சி.

இது பற்றி மாநில அரசு தேர்வாணைய செயலாளர் ராஜேந்திரா மங்க்ருல்கர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இதுவரை 5 போர்ட்டர் பதவிகளுக்கு 2,424 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  அவற்றில் எம்.பில் படித்தவர்கள் 5 பேர், முதுகலை டிப்ளமோ படித்தவர்கள் 9 பேர், டிப்ளமோ படித்தவர்கள் 109 பேர் மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்கள் 253 பேர் உள்ளனர் என கூறியுள்ளார்.

வருகிற ஆகஸ்டில் இதற்கான தேர்வுகள் நடைபெற கூடும்.  இந்த விண்ணப்பங்களில் 984 பேர் பட்டதாரிகள் ஆவர்.  12ம் வகுப்பு படித்தவர்கள் 605 பேர், 10ம் வகுப்பு படித்தவர்கள் 282 பேர் மற்றும் 10ம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 177 பேர் உள்ளனர்.

கடந்த டிசம்பர் 2015ம் ஆண்டு இந்த பதவிகளுக்காக மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் கொடுத்திருந்தது.  இந்த பதவிகளுக்கான வயது தகுதி 18 முதல் 33 ஆகும்.  இதற்கான எழுத்து தேர்வில், மொழி திறன் மற்றும் அடிப்படை கணித திறமைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.