Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவே ஜிப்மர் தேர்வு எழுதினேன்: பள்ளி முதல்வர் விளக்கம்!


எனது அனுபவத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிப்பதற்காகவே ஜிப்மர் தேர்வு எழுதினேன் என 44 வயது தனியார் பள்ளி தலைமையாசிரியர் கூறியுள்ளார்.

புதுச்சேரி, கோரிமேட்டில் இயங்கி வருகிறது மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. ஒவ்வொரு வருடமும் இந்தக் கல்லூரியில் இருக்கும் 150 மருத்துவப்படிப்புக்கான இடங்களை இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ச்சி பெறும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும். இந்த வருடம் முதல் காரைக்காலிலும் ஜிப்மரின் கிளை தொடங்கப்பட்டு அதில் 50 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த 200 மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கடந்த 5-ம் தேதி 270 மையங்களில் நடைபெற்றது. பின்னர் இந்தத் தேர்விற்கான முடிவுகள் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் 44 வயதுடைய புதுச்சேரியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பெயர் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் தேர்வில் வெற்றி பெற்ற சரவணன் என்பவர் லாஸ்பேட்டையில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே, தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்து, 1972-ம் ஆண்டு பிறந்த ஒருவர், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது எப்படி சாத்தியமாகும் என்றும், இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

ஜிப்மர் தேர்வு எழுதியது ஏன் என்பது குறித்து தலைமையாசிரியர் சரவணனிடம் கேட்டபோது, “மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஜிப்மர் நுழைவுத் தேர்வை 55 வயது வரை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று விதிமுறையில் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் நான் நுழைவுத் தேர்வை எழுதினேன்.

மேலும், எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுதான் +1 வகுப்பு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த வருடம் +2 தேர்வு எழுத இருக்கும் அந்த மாணவர்களுக்கு ஜிப்மர் நுழைவுத் தேர்வு எழுதுவது குறித்தும் நாங்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். எனது அனுபவத்தை வைத்து மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க முடியும் என்பதால் மட்டுமே நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால், தற்போது நான் அதில் வெற்றி பெற்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சி. மேலும், பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தால் 'மாணவனாக' ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல தயாராகவே இருக்கிறேன்” என்றார்.

இவர் கல்லூரியில் சேரவில்லை என்றால் அந்த வாய்ப்பு அடுத்த இடத்தில் இருக்கும் மாணவருக்கு சென்றுவிடும். எது எப்படி இருந்தாலும் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதற்காக தேர்வெழுதிய இந்த நல்லாசிரியரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.