ஓர் அரசனிடம் மதி நுட்பமும், விவேகமும் நிறைந்த ஒரு மந்திரி இருந்தார். ஆனால், அந்த மந்திரியைப் பற்றி ஒருவன் பின்வருமாறு அரசனிடம் வந்து புகார் சொன்னான்.
""மந்திரி அந்தரங்கத்தில் தங்களுக்கு விரோதியாக இருக்கிறார். எப்படியென்றால், இந்த ராஜ்யத்தில் உள்ள அனைவருக்கும் அவர் தங்க நாணயங்களைக் கடனாகக் கொடுத்து, "அரசர் இறக்கும்போது இந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்' என்று உத்தரவு போட்டிருக்கிறார்!'' என்றார்.
இதைக் கேட்ட அரசனுக்கு மந்திரி மீது மிகுந்த கோபம் வந்துவிட்டது. உடனே மந்திரியைப் பார்த்து, ""நீர் என் முன்னிலையில் நண்பரைப் போல் இருக்கிறீர். அந்தரங்கத்தில் என் விரோதியாக இருக்கிறீர் ஏன்?'' என்று கேட்டான்.
மதியூகியான மந்திரி சொன்னார். ""அரசே! சகல ஜனங்களும் தங்கள் நலனை விரும்ப வேண்டும் என்பது என் ஆசை. தாங்கள் காலமாகும் போது என்னிடம் கடனைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டுமே என்பதற்காகத், தாங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள் அல்லவா?''
மந்திரி கூறியதைக் கேட்டு அரசன் பெரிதும் மனம் மகிழ்ந்தான். அவருக்கு மேற்கொண்டு பெரிய அந்தஸ்தையும், கவுரவத்தையும் கொடுத்து, அவரைப் பற்றிப் புகார் செய்வதனைக் கடுமையாகத் தண்டித்தான். இருவருக்குமிடையே சண்டை தீயை மூட்டிவிட்டு, அதில் தன்னையே எரித்துக் கொள்வது என்பது புத்தியுடையவன் செய்யக்கூடிய காரியமல்ல.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.