Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

மதுரையில் மீண்டும் குப்பையில் பெண் சிசு


குழந்தையை கடத்தி விற்க முயன்ற விவகாரம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதிகாலை, குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மதுரையில், பிறந்த 11 நாளே ஆன குழந்தை கடத்தி விற்க முயன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், டாக்டர் தம்பதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள குப்பை தொட்டியில், பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பிறந்த இக்குழந்தையை, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அப்பகுதி கீரை விற்கும் பெண் ஒருவர் எடுத்து, தன் வீட்டில் பாதுகாத்தார்.
அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையால், குழந்தை குறித்து அவர் போலீசிற்கு தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து குழந்தையை மீட்டு, 'சைல்டு லைன்' அமைப்பினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.இதற்கிடையில், குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து, அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில்
கூறியதாவது: குழந்தையை விற்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள டாக்டர்களுக்கும், இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை.
டாக்டர் சாந்தி மனிதாபிமான முறையில், ஆதரவற்ற குழந்தையின் தாய்க்கு உதவும் வகையில் சட்ட விதிகளை அறியா மல் காப்பக நிர்வாகத்திடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார். ஆனால் போலீசோ, குழந்தையை கடத்தி விற்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்துஉள்ளனர். தொண்டு நிறுவன நிர்வாகிகள், என்ன காரணத்திற்காக குழந்தையை பெற்றனர் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் முறையாக விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில், ஏற்கனவே குழந்தை திருட்டு தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. அந்த வழக்கை போல், இந்த வழக்கையும் போலீசார் ஜோடித்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.