Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2016

கிர் வனப்பகுதியில் சிங்கத்தோடு ‘செல்பி’ வேண்டாம்: குஜராத் வனத்துறை எச்சரிக்கை


குஜராத்தின் கிர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிங்கத்தோடு செல்பி புகைப்படம் எடுக்கக்கூடாது என்று அந்த மாநில வனத்துறை எச்சரித்துள்ளது.

குஜராத்தில் ஜுனாகத், சோம் நாத், அம்ரேலி மாவட்டங்களுக்கு உட்பட்ட 1412 கி.மீட்டர் பரப்பள வில் கிர் தேசிய பூங்கா அமைந் துள்ளது. இது ஆசிய சிங்கங்களின் சரணாலயம் ஆகும். வங்கப் புலிகள், சிறுத்தைகள், மான்கள், முதலைகள், எருதுகள், மலைப் பாம்பு உள்ளிட்டவையும் அங்கு உள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு கணக் கெடுப்பின்படி கிர் வனப்பகுதியில் 523 சிங்கங்கள் உலவுகின்றன. இவற்றை காண கிர் பூங்காவுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களில் பலர் சிங்கங்களுடன் செல்பி புகைப் படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து குஜராத் மாநில வனத் துறை தலைமை பாது காவலர் சிசோடியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிர் வனப்பகுதியில் சிங்கங்களுடன் செல்பி புகைப்படம் எடுக்க இளை ஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பது கவலை அளிக்கிறது. சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்க்க இத்தகைய விபரீத செல்பி முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.

செல்பி புகைப்படம் எடுக்க சிங்கங்களுக்கு மிகவும் அருகே இளைஞர்கள் செல்கின்றனர். இது உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும் சட்டப்பூர்வமாகவும் இது தவறான நடவடிக்கை. எனவே சுற்றுலா பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சிங்கத்தோடு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த உத்தரவை மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

கிர் வனப்பகுதியில் அண்மை யில் 14 வயது சிறுவன், ஒரு பெண் உட்பட 3 பேர் சிங்கம் தாக்கி உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.