Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

நண்பர் செல்பி எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டதால் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்றவர் கைது


அரியலூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து பல வருடங்களாக, தலைமறைவாக இருந்த ஆசாமி  நேற்று புதுவண்ணாரப்பேட்டை போலீசில் பிடிபட்டார். அரியலூர் மாவட்டம், திண்ணையூரை சேர்ந்தவர் மணி என்ற விஜயகுமார் (45). இவரது மனைவி  விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 மகள்கள்,  ஒரு மகன் உள்ளனர். மணி வெளிநாட்டில் மெக்கானிக்கல் தொழில் செய்து வந்தார். கடந்த 2009ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான அரியலூருக்கு திரும்பினார். அப்போது மனைவியின் நடத்தை மீது ஊரார் தவறாக கூறவே  இதுபற்றி நேரில் கேட்டுள்ளார்.

இதனால் மனைவிக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் 2009ம் ஆகஸ்ட் மாதம் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்துள்ளார்.  அதன் பின்னர் போலீசிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பினார். அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாமியை தேடிவந்தனர். போலீசிடம் இருந்து  தப்பிய மணி ஆந்திர மாநிலம், நெல்லூரில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 3 வருடமாக  சர்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இங்கு தனது பெயரை விஜயகுமார் என மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், ஓட்டலில் வேலை செய்த தினேஷ் என்ற நண்பருடன் ஒரே அறையில் தங்கியுள்ளார். அவ்வப்போது தினேஷ் செல்பி எடுப்பது வழக்கமாம்.  செல்பி எடுத்து பேஸ் புக்கில் தினேஷ் போட்டுள்ளார். இந்த பதிவை அரியலூரில் உள்ள மணி என்ற விஜயகுமாரின் உறவினர்கள் பார்த்துள்ளனர். அவர்கள்  சென்னை புதுவண்ணாரப்பேட்டைக்கு விரைந்து வந்து  போலீசாரிடம் நடந்த கொலை சம்பவம் பற்றியும் மேலும் அவர் தங்கியுள்ள இடத்தையும்  கூறியுள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர்  ரமேஷ்பாபு மற்றும் போலீசார் ஓட்டலுக்கு சென்று மணியை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரை கைது  செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். மேற்படி தகவல் தெரியவந்ததை அடுத்து அரியலூர் போலீசாருக்கு இதுபற்றி  தகவல்  கொடுத்தனர். அரியலூரில் இருந்து போலீசார் விரைந்து வந்து அவரை இன்று காலை  அழைத்து செல்கின்றனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.