Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

வேலை வாங்கி தருவதாக ரூ. 1 கோடி மோசடி : ஈரோடு அரசு பள்ளி ஆசிரியைக்கு போலீஸ் குறி


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி புகாரில் சிக்கிய அரசு ஆசிரியை, பள்ளிக்கு வராமல் டிமிக்கி கொடுத்துள்ளார்.

ஈரோடு, திண்டல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை வாரணாம்பிகை. அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன், ஈரோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஈரோடு தாலுகா போலீசில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தார்.

அதில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசிரியை வாரணாம்பிகை, ஐந்து லட்சம் ரூபாய் பெற்று கொண்டார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகிறார். ஈரோடு மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, ஒரு கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார். எனவே, பணத்தை பெற்று தர வேண்டும். மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில், புகாரில் கூறப்பட்டவை உண்மை என ஊர்ஜிதம் செய்யப்பட்டது. பள்ளி கல்வி துறை அலுவலகத்தில் தாலுகா போலீசார் தகவல் தெரிவித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தயாராகினர். தேர்தல் நெருங்கிய நிலையில், அரசு ஆசிரியை கைது செய்வதை தள்ளி போட்டனர்.
இதையறிந்த அரசுப்பள்ளி ஆசிரியை தப்பி ஓடினார். சென்னையில் இருப்பதாகவும், வெளி நாட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிந்து நேற்று பள்ளிகளும் திறந்து விட்டன. அவர் பள்ளிக்கு வரவில்லை. தனக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதாக கூறி, 55 நாள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் எனக்கோரி, கல்வி துறைக்கும், பள்ளிக்கும் பதிவு தபாலில் அரசு பள்ளி ஆசிரியை பெயரில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதிவு தபால் அனுப்பிய நபரை கண்டுபிடித்து, அதன் மூலம் ஆசிரியை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தாலுகா போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.