Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

தொப்பையில்லாத வயிறு வேண்டுமா? இந்த யோகாவை ட்ரை பண்ணுங்க


மகர அதோ முக ஸ்வனாசனா அல்லது டால்பின் ப்ளாங்க் ஆசனம் :
மகர அதோ முக ஸ்வனாசனா என்றால் டால்பின் போன்று தோற்றம் கொண்டுள்ள ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தை செய்வதால் குறிப்பிட்ட பாகத்திற்கு என்றில்லாமல் மொத்த உடலுக்கும் நல்லது.

இந்த யோகா பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், பேலன்ஸ் செய்து இந்த யோகாவை செய்வது சற்று கடினம்.ஆனால் பலன் அற்புதமானது. அந்த காலத்தில் தவம் செய்யும் ரிஷிகள் இந்த யோகாவின் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் மொத்த பேலன்ஸையும், கைகளில் தாங்காமல், புஜத்தில் தாங்க வேண்டும். இதனால் கைகள் மிகவும் வலுப்பெறும்.

மொத்த உடலும் தடையில் படாமல் சிறிது இடைவெளி விட்டு தம் பிடித்து செய்வதால், அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து தட்டையான வடிவம் பெறும். மொத்த உடலுக்கும் சீராக ரத்தம் பாய்ந்து புத்துணர்ச்சி பெறும். தசைகள் இறுகும்.

அப்படிப்பட்ட யோகாவை எப்படி செய்வது என பார்க்கலாம்.

முதலில் தரையில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். ஆழமாய் மூச்சை இழுத்து விடுங்கள். இரு முழங்கைகளை இப்போது தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள்.



உள்ளங்கைகளை தரையில் படுமாறு வைத்து, முழங்கைகளால் ஊன்ற வேண்டும். மெதுவாய் உடலை மேலே தூக்குங்கள். உங்கள் கால் விரல்களை தரையில் உந்தியவாறு, உடலை தூக்குங்கள்.

இப்போது முழங்கையில் நீங்கள் உங்களை தாங்குமாறு பேலன்ஸ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை உந்திக் கொள்ள வேண்டும். உடல் தரையில் முட்டக் கூடாது. இந்த நிலையில் 1-10 வரை எண்ணுங்கள்.

ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். இப்போது மெதுவாய் உடலை படுக்க வைத்து, கைகளை தளர்வாய் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இயல்பு நிலைக்கு வரலாம்.

பலன்கள் :
முதுகுவலி மற்றும் உடல்வலி நீங்கும். கால் தசைகள் இறுகும். ஜீரணத்தை வலுப்படுத்தும். அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரையும்.

குறிப்பு :
கழுத்து வலி, முதுகில் அடிபட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.