Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண் ஐ.டி ஊழியர் படுகொலை..! சென்னையில் பயங்கரம்


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி நிறுவன பெண் ஊழியர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானகோபாலகிருஷ்ணன். இஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுவாதி (24). இவர், செங்கல்பட்டு பரனூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த சுவாதியை, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டினார்.

முகத்திலேயே வெட்டு விழுந்ததில் சுவாதியின் பற்கள் பிளாட்பாரத்தில் சிதறிக் கிடந்தன. இது தவிர உடலில் பல இடங்களிலும் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். மர்ம நபரின் கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமலேயே சுவாதி, ரத்த வெள்ளத்தில் பிளாட்பாரத்திலேயே சடலமானார். அதன்பிறகே மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நுங்கம்பாக்கம் போலீஸார், சுவாதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒருதலைக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

சுவாதியின் செல்போனுக்கு வந்த போன் அழைப்புகள் மற்றும் அவரது தோழிகளிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே இந்த கொலை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சமீபகாலமாக கொலை சம்பவங்கள் பட்டப்பகலில் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. வியாசர்பாடியில் வக்கீல் ரவியை பட்டப்பகலில் கொலை செய்தனர். சட்ட, ஒழுங்கு சீர்குலைந்து வருவதை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே பெண் மென்பொறியாளர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தற்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் ஐடி நிறுவன ஊழியர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.