Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

ஆண்கள் கால்பந்து விளையாட்டில் சாதனைப் படைத்த பெண் பயிற்சியாளர்!


ஹாங்காங் பிரீமியர் லீக்கில், 21 வருடங்களுக்குப் பிறகு, ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஆனால், ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுவது என்னவோ 27 வயது சான் ( Chan Yuen-ting)  எனும் பெண் பயிற்சியாளரைத்தான்.

இவருக்கு 'ஆண்கள் கால்பந்து விளையாட்டின் தரவரிசையில் உயர் நிலையை அடைந்த முதல் பெண்'  என்ற கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இவர், "இது நடக்குமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேட்டி, புகைப்படம், செய்தி இதிலெல்லாம் எனக்கு அனுபவம் கிடையாது. நான் செய்வதை சரியாக செய்வேன். இன்று என்னை பலரும் தங்களின் முன்னுதாரணமாகக் கூறுகின்றனர். இதற்கு மீடியாவின் பங்கு மிக அதிகம்!" என்கிறார்.

 சான் சொல்வதுபோன்று இதில் மீடியாவின் பங்கு சற்று அதிகம்தான். இதுபோன்று, ஆண்கள் லீக்கில் பெண்கள் இடம்பெறுவது மிகவும் அபூர்வம். 2014ல் Franceல் நியமிக்கப்பட்டHelena Costa எனும் பெண், வெறும் 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். காரணம், இவருக்கு போதிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை. பல முடிவுகள் இவருடைய முதுகிற்குப் பின்னால் எடுக்கப்பட்டன.

ஆனால், சான் பிற பெண்களுக்கு வெற்றியின் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். "ஒவ்வொரு இடத்தின் கலாச்சாரத்தைப் பொறுத்து இது மாறுபடும். ஹாங்காங்கைப் பொறுத்தவரை, ஆண் பெண் என்ற பேதமே கிடையாது. எல்லாரும் சமம்தான். நான் இளமையான ஒரு பெண். எனக்கு கிளப் ஒரு வாய்ப்பளித்தது!" என்று மேலும் கூறுகிறார் சான்.



முந்தைய பயிற்சியாளர் சீனாவிற்கு சென்ற பிறகு, லைசென்ஸ் உள்ள ஒரே நபரான சானிற்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. Beef ball என்று செல்லமாக அழைக்கப்படும் சான், தன் வயதிற்கு மீறி கடினமாக உழைத்ததால் இந்த உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார்.

"வேலைக்குச் சேர்ந்த புதிதில், எனக்கு பயமாக இருந்தது. எனக்கு அனுபவம் கிடையாது. தலைமை கோச்சாக பணிபுரிய மிகவும் பயந்தேன். ஆனால், இங்குள்ளவர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். எனக்குத் துணையாக நின்றார்கள்", என்கிற சான், தெற்கு சீனாவுடனான போட்டியில் 6-1 என்ற வித்தியாசத்தில் ஜெயித்ததும், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றார்.

படிப்படியாக அனைத்து வெற்றிகளும் இவருடையது ஆனது. போட்டி முடிந்ததும், "நான் இருந்த பரவச நிலையில், சிரிக்கக் கூட மறந்துவிட்டேன். இது ஒரு கனவு போல இருந்தது. நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தோம்!" என்கிறார் சான்.



முந்தைய ஆஸ்திரேலியா இன்டர்நேஷனல் கமிட்டியின்  உறுப்பினரான Moya Dodd, "இவருடைய வெற்றி என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. காரணம், கோச்சாக பெண்கள் நியமிக்கப்பட்டால் நிச்சயமாக அவர்கள் வெற்றியைத் தழுவுவார்கள். பெண்கள் கால்பந்து விளையாட்டில், 2000ல் இருந்து, பெண்களின் தலைமையிலான டீம்களே அநேகமாக ஜெயிக்கின்றன. ஆனால், பெரும்பாலான கோச்கள் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது!" என்கிறார்.



Dodd ஆச்சர்யப்படும் ஒரே விஷயம், இங்கு சானிற்கு கிடைத்த வாய்ப்பே. "இவருடைய வெற்றியால், அனைத்து பெண் கோச்களும் நிச்சயமாக மகிழ்ச்சியடைவார்கள். 99% பணப்புழக்கமுள்ள ஆண்கள் அணியில் பெண்கள் கோச்களாக நியமிக்கப்படுவதில்லை."  என்கிறார் அவர்.

ஏற்கெனவே Spanish second division clubல் சானிற்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால், அவர் அங்கு செல்வதாக இல்லை. அடுத்த ஐரோப்பா லீக்கில் இவர்கள் அணி இடம் பெறும். அது இவருக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.

"ஹாங்காங்கில் நான் ஆண்கள் அணியில் பணி புரிந்து கொண்டுதான் இருப்பேன். என்றாவது ஒரு பெண்கள் அணிக்கு நான் தேவைப்பட்டால், செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனக்கு USA, UK அல்லது ஐரோப்பாவில் எங்காவது வேலை செய்ய வேண்டும் என்பதே ஆசை. ஆனால், எனக்குப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். படிப்பதற்கு நிறைய உள்ளது!" என்கிறார் சான். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.