Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2016

உடல் பருமனை கண்டு பயப்படாதீங்க...


நொறுக்குத்தீனி பழக்கம், வரைமுறையற்ற சரிவிகிதம் இல்லாத உணவு முறை ஆகியவற்றால் உடல் பருமன் பிரச்னை உருவாகிறது. நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. இது அவரவர் பார்க்கும் வேலை மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். அதிக கலோரி உணவுகள் உட்கொள்ளப்பட்டு எரிக்கப்படாவிட்டால் அது கொழுப்பாக படிந்து விடுகிறது.

பின்னர் உடல் எடை சிறிது சிறிதாக அதிகரிக்கிறது.  உட்கார்ந்து பார்க்கும் அலுவலக பணியாக இருந்தாலும், அன்றாடம் உடற்பயிற்சி செய்தால் இதில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், பலர் உடற்பயிற்சியையே மறந்து விடுகின்றனர்.  உடல் பருமன் ஆகிவிட்டால் பல நோய்கள் அழையா விருந்தாளியாக நுழைந்து விடுகின்றன. இதய சம்பந்தப்பட்ட நோய்கள், டைப் 2 டயாபடீஸ், தூங்கும் போது சுவாச கோளாறு, மூட்டுகளில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாவது, கல்லீரல் பாதிப்புகள், சிறுநீர் பையில் கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மலட்டுத் தன்மை, குழந்தைப்பேறின் போது சிரமம், கருச்சிதைவு, மனஅழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

பொதுவாகவே கொழுப்பு அதிகமுள்ள உணவை உடல் பருமன்காரர்கள் வெறுத்துவிடுவது நல்லது. எண்ணெயில் வறுத்த உணவுகள்,  ஸ்வீட்ஸ், சாக்லேட், பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்தால் நலம் பயக்கும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி, கிழங்கு வகைகளை குறைவாக சாப்பிடுவதும் நல்லது. நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், புரதம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்களை உண்ணலாம்.கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

செவ்வியம், சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, பெருங்காயம், துவர்சிலைஉப்பு, சித்ரமூலம் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்யவும். வீட்டில் உள்ள சத்துமாவில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மேற்கண்ட பொடியை சிறிது கலந்து தயிரில் இருந்து எடுக்கப்பட்ட தெளிவு நீரையும் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வரவும்.

கடுக்காய் தோல், நெல்லிக்காய் (காய்ந்தது), தான்றிக்காய் தோல், சுக்கு, திப்பிலி, இந்துப்பு (வறுத்தது) ஆகியவற்றை சம எடையில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு அந்த பொடியை எடுத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வரவும். இப்படி 6 மாதங்கள் சாப்பிட்டால் உடல் மெலியும். அதே நேரம், வலிமை குறையாது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.