Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2016

கண் பார்வையை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்கள்!


இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம்.

அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

ஆயுர்வேதத்தின் படி, ஒருவரின் உடலில் பித்தமானது சமநிலையற்று இருந்தால், கண்பார்வை பலவீனமாகக்கூடும். எனவே இந்த பித்தத்தை சமநிலையாக்க ஒருசில ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன. அவற்றால் நிச்சயம் கண்பார்வையை மேம்படுத்த முடியும்.

திரிபலா
1 டேபிள் ஸ்பூன் திரிபலா பொடியை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் அந்த நீரால் கண்களைக் கழுவி வந்தால், கண் பார்வை மேம்படும்.

நெல்லிக்காய்
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து பருகி வர, கண்பார்வை பலமாகி, கண் பிரச்சனைகள் தடுக்கப்படும்.



கேரட்
உங்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை பிரச்சனை இருப்பின், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வாருங்கள். இல்லாவிட்டால் தினமும் ஒரு கேரட்டை உட்கொண்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பாதாம்
இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை தோலை நீக்கிவிட்டு, அரைத்து பேஸ்ட் செய்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து தினமும் பருக, கண் பார்வை மேம்படும்.

பிரிங்ராஜ்
கண் பார்வை மேம்பட வேண்டுமானல், பிரிங்ராஜ் மூலியை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களின் மேல் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களின் ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம்.

அதிமதுரம்
ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை பாலில் கலந்து, தேன் சேர்த்து பருகி வர, கண்களில் இருக்கும் அழற்சி மற்றும் வலி நீங்கி, கண்பார்வை மேம்படும்.

பூண்டு
தினம் ஒரு பூண்டு அல்லது சமைக்கும் உணவில் பூண்டை சேர்த்து வர, அதில் உள்ள உட்பொருட்கள், பலவீனமான கண் பார்வையை மேம்படுத்தி, கண் பிரச்சனைகள் அண்டாமல் தடுக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.