Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

எப்பப்பாரு கொட்டாவி விட்டுக்கிட்டே இருக்கான்னு இனி கோவிக்காதிங்க மகா ஜனங்களே..!!


கொட்டாவி விடுவது ஏன் என்பது குறித்து அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அது போன்ற கேள்விகளுக்கான பதிலை நாம் அறிந்திருப்போம். ஆனால் நீங்கள் கொட்டாவி விடும் போது கண்களில் நீர்கசிவது ஏன் என்று தெரியுமா? கண்களில் நீர் கசிவதால், ஏதோ ஒரு சீரியஸான பிரச்னையால் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது ஏதோ ஒரு நோய் வந்துள்ளதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். கண்களை டிரையாவதில் இருந்து பாதுகாக்கவே நீர் வருகிறது. எனவே அழுவது நல்லது. இது ஒரு புறம் இருக்கட்டும். சிலருக்கு ஒரு சில காரணங்களால் கண்களில் அடிக்கடி நீர் கசியும். இது வழக்கமான ஒன்று தான். அவர்களின் சந்தேகங்களுக்கு விடையாகவே இந்த கட்டுரை.....

கொட்டாவி வருவது ஏன்?

மிகவும் சோர்வடைந்துவிட்டால் கொட்டாவி வரும். இதனை அனைவரும் அடிக்கடி உணர்ந்திருப்பார்கள். உடலுக்கு தேவையான ஆக்சிஜன் மெதுவாக கிடைப்பதால், மூச்சுவிடுவது மெதுவாக இருக்கும். இந்த கொட்டாவி மூலம் அதிகப்படியான ஆக்சிஜன் உடலுக்கு கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு உடலில் இருந்து வெளியேறும்.

கண்களில் நீர் கசிய கொட்டாவி தூண்டுகிறது

கொட்டாவி விடும் சமயத்தில் கண்களில் நீர் கசிய ஆரம்பிக்கிறது. ஏன் என்று தெரியுமா?. அதிகப்பட்டியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரபிகள்(lacrimal glands) தூண்டப்பட்டு கண்கள் மேற்பகுதியின் ஓரத்தில் நீர் வருகிறது. நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதால், இவை வருவதில்லை. எனவே தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.

கொட்டாவி விடும் போது கண்களை இறுக்கி மூடுகிறோம்.

கொட்டாவி விடும் போது கண்களை இறுக்கி மூடுவதால் கண்ணீர் சுரபிகள் அழுத்தம் ஏற்பட்டு கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது.

இதனால் தீங்கு ஏற்படாது. இது உங்கள் கண்களை வறண்டு போவதில் இருந்து பாதுகாக்கிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.