ஓட்டத்தில் பலசாலியான மான், குதிரைகளை எளிதாக வேட்டையாடும் புலிக்கு ஒரு குரங்கு தண்ணி காட்டிய வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
உத்தரகாண்ட் ராம்நகரில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அனைத்து வகை மிருகங்களும் சுதந்திரமாக சுற்றித்திரியும். கடந்த மாதம் ஒரு குரங்கு தனது குட்டியுடன் சிறிய மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற புலி ஒன்று தாய்குரங்குடன் குட்டியையும் சேர்த்து உணவாக்கிக்கொள்ள நினைத்தது. இதனால் மரத்தின் மீது தாவிக்குதித்து ஏறியது.
இதைப்பார்த்து பயந்துபோன குட்டிக் குரங்கு, தாய் குரங்கின் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டது. இதனால் குட்டியை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று நினைத்த தாய் குரங்கு, மரத்தின் ஒரு கிளைக்குச் சென்றது. புலி மெதுவாக அந்த கிளைக்கு வந்தது. இதைப்பார்த்ததும் குரங்கு அப்படியே மெதுவாக அந்த கிளையின் நுனிப்பகுதிக்கு வந்தது. கிளை அப்படியே கீழ் நோக்கி சரிந்தது.
அப்போது புலியும் மெதுமெதுவாக நுனிக்கு வர, கண்ணிமைக்கும் நேரத்தில் குரங்கு மற்றொரு கிளைக்குத் தாவியது. குரங்கு எட்டிய தூரத்தில்தான் இருக்கிறது என்று முன்னே நகர்ந்த புலி, கை நழுவி கிளையின் நுனியில் தொங்கியபடி பரிதாபமாக பார்த்துக்கொண்டே இருந்தது. பின்னர் கிளையில் இருந்து திடீரென கிழே விழுந்து பறக்க பறக்க முழித்துக்கொண்டு குரங்கை தப்பவிட்ட விரக்தியில் அப்படியே மெதுவாக நகர்ந்து சென்றது.
இந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்...

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.