Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

இங்கிலாந்து வேல்ஸ் ரசிகர்கள் இணைந்து ரஷ்யர்கள் மீது தாக்குதல்


ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தில் ரஷ்ய அணி, ஸ்லோவேகியா அணியிடன் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.  போட்டியை காண்பதற்காக இரு நாட்டு ரசிகர்களும் லில்லி நகரில் குவித்திருந்தனர். கூடவே, ஏற்கனவே ரஷ்ய ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து ரசிகர்களும், லில்லி நகரில் திரண்டிருந்தனர். ரசிகர்கள் மோதலைத் தடுக்க லில்லி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.          

எனினும் இந்த போட்டியில் ரஷ்ய அணி தோல்வி கண்டதால், ரசிகர்களுக்கிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டது. போட்டி முடிந்ததும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் திரண்டிருந்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரசிகர்கள்,  ரஷ்ய ரசிகர்களுடன் தகராறில் ஈடுபடத் தொடங்கினர். பிரிட்டானியர்கள் என்ற ரீதியில் இரு தரப்பும் ஒன்று சேர்ந்து ரஷ்ய ரசிகர்களைத் கடுமையாகத் தாக்கினர். ஆனாலும் ரஷ்ய ரசிகர்களிடம் அடி வாங்கியதில் 16 இங்கிலாந்து ரசிகர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில்  36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே லில்லியில் பிடிபட்ட 2 ரஷ்ய ரசிகர்கள்,  பிரான்சில் இருந்து ரஷ்யாவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம்,  ரஷ்யாவுக்கான பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஐரோப்பிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இங்கிலாந்து, வேல்ஸ் அணியை 6.30 மணிக்கும்,  உக்ரேன், வடக்கு அயர்லாந்து அணியை 9.30 மணிக்கும், ஜெர்மனி, போலந்து அணியை 12.30 மணிக்கும் சந்திக்கின்றன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.