Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

'என்னை தவிக்கவிட்டு சென்றுவிட்டாள்..!' ட்விட்டரில் கலங்கிய பெண் எம்பி கணவர்


இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி எம்பியான ஜோ காக்ஸூன் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாத கணவர், தனது ட்விட்டர் பக்கத்தில் மனக்கவலையைத் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்டால் நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு தொழிலாளர் கட்சி எம்பியான ஜோ காக்ஸூன் எம்பி சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரது கணவர் மனதுருகி ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், "எனது இரு குழந்தைகள் மற்றும் என்னையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். அதிக சிரமங்கள், அதிக வலிகள், குறைந்த சந்தோஷங்களுடன் கூடிய சோகமான புது வாழ்க்கை எங்களுக்கு ஆரம்பித்துவிட்டது. நான் வாழும் ஒவ்வொரு நொடிகளையும் அவளுக்காக சமர்ப்பிக்கிறேன். எனது மனைவி, தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மனத்துயரங்கள் ஏதுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.

மேலும் கடந்த 3 மாதங்களாக அவள் தொடர்பாக வெளியான தவறான செய்திகளின் காரணமாக தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.