சாப்ட்வேர் கம்பெனியில் வேலை தருவதாக கூறி நூதன முறையில் பணம் மோசடி செய்த நிறுவனம் மீது பெண்கள் புகார் அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முடியரசனார் சாலையில் தனியார் சாப்ட்வேர் டெக்னாலஜி அலுவலகம் செயல்பட்டு வந்தது. வேலைக்கு பெண்கள் தேவையென்றும், சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதற்கான நேர்காணல் நடக்க உள்ளது என்றும் அந்நிறுவனம் விளம்பரம் செய்தது. பணியில் சேருபவர்களுக்கு ரூ.8000 முதல் ரூ.30 ஆயிரம் சம்பளம் என அறிவிக்கப்பட்டது. இதை நம்பி எம்பிஏ, பிஇ படித்த பலர் விண்ணப்பித்தனர். இவர்களில் 200 பேருக்கு கடந்த ஏப். 4ல் நேர்காணல் நடத்தி, வேலைவாய்ப்பு அலுவலர் மூலமே பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 90 நாட்கள் பயிற்சி பெற வேண்டும். அதற்கு ரூ.8,500 கட்டணம் என நியமன ஆணை பெற்றவர்களிடம் அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
இதை நம்பி ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். திடீரென 30 நாட்களில் பயிற்சி முடிந்ததென்றும், பணிநியமன ஆணையை திருச்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் சாப்ட்வேர் நிறுவனத்தினர் எஸ்எம்எஸ் அனுப்பினர். இதனால் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள், சந்தேகமடைந்து நேற்று காலை அலுவலகம் சென்றபோது மூடிக்கிடந்தது. அதன் நிறுவன முதன்மை செயல் அலுவலரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள், காரைக்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் கூறும்போது, ‘‘மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் இந்த நிறுவனமும் கலந்து கொண்டது. ஆனால், அந்த நிறுவனம் பணம் வாங்குவது குறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை.’’ என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.