Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

யானை துரத்திய அனுபவம்: வீடியோவுடன் பகிர்ந்த அர்னால்டு


ஆக்‌ஷன் ஸ்டார் அர்னால்டு ஸ்வார்ஷ்நெகர், தன்னுடைய தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது யானை ஒன்றால் துரத்தப்பட்ட திகில் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

68 வயதான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்நெகர், தென் ஆப்பிரிக்காவில் தனது குழுவுடன் பயணித்த போது, யானை ஒன்றால் வழிமறிக்கப்பட்டு, துரத்தப்பட்ட அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

''யானை துரத்தலை படமாக எடுத்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது'' என்று தலைப்பிட்டு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார் அர்னால்டு.

அந்த வீடியோவில், எதிரே வந்த யானையைத் திடுக்குறச் செய்யாமல் இருக்க, ஓட்டுநர் வண்டி என்ஜினை அணைக்கிறார். திரும்பவும் அவர் காரை ஸ்டார்ட் செய்யும்போது யானை பின்வாங்க ஆரம்பிக்கிறது.

ஒரு பயணி, ''என்ஜினை ஆன் செய்ததால் யானை போய் விட்டதா'' என்று கேட்கிறார்.

அர்னால்டு, ''இல்லை அது நம்மை தாக்கப் போகிறது!'' என்கிறார்.

என்ன நடந்தது..? காணொளியைக் காணுங்கள்.


மேலும் ''நான் இயற்கையின் படைப்புகளை எண்ணி வியக்கிறேன். நாம் விலங்குகளைக் கொல்வதை நிறுத்த வேண்டும். அவற்றுடன் புகைப்படம் எடுங்கள். கொல்ல முயற்சிக்காதீர்கள். யானையின் அழகை, பிரமாண்டத்தை கண்டு ரசியுங்கள். தந்தத்தை திருட நினைக்காதீர்கள்'' என்றும் கூறியுள்ளார் அர்னால்டு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.