Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 3 /4 கப்
எண்ணெய் - 2 1 /2 மேசைக்கரண்டி
முட்டை - 2
சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - கால் தேக்கரண்டி
சிக்கன் எலும்பில்லாதது - 400 கிராம்
கேரட் - 2
பட்டாணி - அரை கப்
வெங்காயத் தாள் - சிறிதளவு
பாஸ்மதி அரிசி - 2 கப்

செய்முறை :

* அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப்பதம் வற்றும் வரை வறுத்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 - 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும்.

* சிக்கனை எலும்பு இல்லாமல் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

 * கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும்.

* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.

* கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி (முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.

* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .

* இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

* இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

* எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.