Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

அமைச்சர் தந்த அரசியல் நெருக்கடி: பெண் டி.எஸ்.பி. ராஜினாமா!


தொடரும் அரசியல் மற்றும் மேல் அதிகாரிகளின் நெருக்கடிகளால் பெண் டி.எஸ்.பி. ஒருவர் ராஜினாமா செய்துள்ளது கர்நாடகா அரசியலில் பெரும் விவகாரமாக மாறியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில்,கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்திலுள்ள காத்லிகி என்னும் ஊரில், துணை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் அனுபமா ஷெனாய். இவர் கர்நாடகாவின் தொழில் துறை அமைச்சர் பி டி பரமேஷ்வர் நாயக் என்பவரின் போன் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை என்பதால் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் இரண்டுமுறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் இன்று(திங்கள்) தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.