Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

இரும்புச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்


தேவையான பொருட்கள் :

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 10,
பால் - 2 கப்,
பாதாம் - 4,
முந்திரி - 4,
அக்ரூட் - 1 டேபிள் ஸ்பூன்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

* கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள்.

* பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள்.

* நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகள் கையில் கொடுங்கள்.

* குடித்து பார்த்து குழந்தைகள் குதூகலிப்பார்கள்.

* இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், புதிய விஷயங்களைக் கிரகிக்கும் திறனையும் இது அதிகப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.