கோவையில் தனது 8 வயது மகளை குடித்துவிட்டு போதையில் வந்த குடிகார தந்தை சூடு வைத்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கோவை, நெகமம் அருகில் உள்ள செஞ்சேரிமலையில் வசிக்கும் கோவிந்தராஜ் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு காயத்திரி என்ற 8 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கோவிந்தராஜ், தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காயத்திரியை எழுப்பியுள்ளார். குழந்தை தூக்கத்தில் இருந்து எழும்பாததால், போதையில் இருந்த கோவிந்தராஜ் ஆத்திரத்தில் குழந்தையின் இரண்டு கண்ணங்களிலும் சூடு வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தை கயாத்ரிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் தாய் சுபா அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தந்தை கோவிந்தராஜை கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.