கடும் வறட்சியை சமாளிக்க கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 200க்கும் மேற்பட்ட குளங்கள் அமைத்துள்ளனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மகாராஷ்டிராவில் ரயில் மூலம் குடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வறட்சிக்கு மத்திய பிரதேசமும் தப்பிக்கவில்லை. மாநில தலைநகர் இந்தூர் அருகே அமைந்திருக்கும் ஜமிலி, யெஷ்வந்த் நகர், ஹஸ்லாப்பூர் மற்றும் பல கிராம மக்கள் வறட்சியால் அவதிப்பட்டனர் ஆனால் அவர்கள், மற்றவர்களை போல் தண்ணீர் கேட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. தாங்களாககே தண்ணீரை கேமிக்கவும், தேக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்காக அவர்கள் புதிதாக குளங்கள் அமைக்கவும், பழைய குளங்களையும் தூர் வாரும் பணியை துவக்கினர். 45 நாட்களில், 18 ஆயிரம் கிராம மக்கள் சேர்ந்து 270 குளங்களை அமைத்தனர். இந்த குளங்கள் சுமார் 200 கிராமங்களில் அமைக்கப்பட்டன. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தொட்ட போதிலும், அதனை பொருட்படுத்தாமல், தங்களது பணியில் தீவிரம் காட்டினர்.
புதிய குளங்கள் பல குளங்களின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. குளங்கள் கரையில் மரங்கள் நடப்பட்டன. பழைய குளங்களும் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டன. இதன் மூலம் பருவமழையின் போது கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியும். அந்த பகுதியில் நீர்மட்டம் உயரும் எனவும் அக்கிராம மக்கள் கருதுகின்றனர். இந்த பணியை கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து செய்துள்ளனர். இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு அப்பகுதி பஞ்சாயத்து ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.