Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

ரத்ததானம் வழங்கி விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்


விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் ரத்ததானம் வழங்கி, கோவில்களில் சிறப்பு வழிபாடு, ஏழைகளுக்கு உணவு–உடை கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.


விஜய் தற்போது பரதன் இயக்கும் தனது 60–வது படத்தில் நடிக்கிறார். தற்போது அவர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளார்.

விஜய் பிறந்தநாளை ரசிகர்கள், ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள். காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர்.சரவணன் தலைமையில் செங்கல்பட்டில் ரத்ததான முகாம் நடந்தது.

அதில் மாநில பொறுப்பாளர் என்.ஆனந்த், நிர்வாகிகள் எம்.எஸ்.பாலாஜி, பூக்கடை சின்னு மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.

தென்சென்னை மாவட்ட தலைவர் அப்புனு தலைமையில் வடபழனி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

வடசென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் தளபதி சிவா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் என்.ஆனந்த் பங்கேற்று 11 குழந்தைகளுக்கு தலா 2 கிராம் தங்கம், ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

மத்திய சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை குமார் தலைமையில் விருகம்பாக்கம் முதியோர் இல்லத்தில் 280 பேருக்கு உணவு, உடை வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சி.ஆர்.சரவணன் தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 42 கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தன. இதில் தினேஷ், பாலாஜி, சின்னு, ரகீம், ஜேம்ஸ், ஆனந்த், பத்ரி பாலா, பிரபு, சரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 110 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் எஸ்.விஜய்குமார், நகர தலைவர் கிருபாகரன், திருமலை, வெங்கட், ஹரி, ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.