சென்னைக்கு அருகில் உள்ள மேல்மருவத்தூரில் ஜீன் 5ஆம் தேதி சுமார் 50 தெரு நாய்களை கிராம மக்கள் எரித்துக் கொன்ற விவகாரம் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மருவத்தூர் அருகே உள்ள கீழமூர் எனும் கிராமத்தில் கடந்த 5ஆம் தேதி, 50 நாய்களை அந்த ஊர் கிராம மக்கள், மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவர் போலீசாருக்கு புகார் கொடுத்தார்.
இதன் பேரில் அங்கு சென்று பார்வையிட்ட போலீசார், அங்கு நாய்கள் எரித்துக் கொல்லப்பட்டதை கண்டுபிடித்தனர். பாதி எரிந்த நிலையில் அங்கு கிடந்த நாய்களின் உடலை மீட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில், அந்த பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மற்றும் மாடுகளில் சில நாய்கள் கடித்து இறந்துவிட்டதால், கோபமடைந்த அவர்கள், அந்த பகுதியில் சுற்றிய தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்று பின் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால், கிராம மக்களின் குற்றச்சாட்டை அஸ்வத் மறுத்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.