Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

நாய்களை வாக்கிங் அழைத்து சென்று சம்பாதிக்கும் வாலிபர் மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம்


மும்பையில் வசதி படைத்தவர்கள் ஏராளமானோர் செல்லப் பிராணியாக நாய்களை வளர்த்து வருகிறார்கள். அந்த நாய் களை வாக்கிங் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லாததால் வாலிபர் ஒருவரை வாடகைக்கு அமர்த்தி நாய்களை வாக்கிங் அழைத்து செல்ல வைக்கிறார்கள்.

அந்த வாலிபரின் பெயர் ஆகாஷ் சர்மா (வயது22). சூரத்தைச் சேர்ந்த இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மும்பை வந்தார். இவருக்கு நாய்கள் மீது அலாதி பிரியம். எனவே நாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். வசதி படைத்தவர்களின் வீடுகளில் நாய்களை பராமரிப்பது இவரது பணி. பின்னர் நாய்களை வாக்கிங் அழைத்து செல்லவும் தொடங்கினார்.

காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் அவர் நாய்களை வாக்கிங் அழைத்து செல்கிறார். நாய்க்கு 30 முதல் 45 நிமிடங்கள் என தினமும் 12 நாய்களை வாக்கிங் அழைத்து செல்கிறார்.
நாய்களை வாக்கிங் அழைத்து செல்வதற்காக 1 நாய்க்கு மாதம் ரூ. 2000 முதல் ரூ. 3000 வரை ஊதியமாக கிடைக்கிறது. நாய்களை பராமரிக்க 1 நாய்க்கு ரூ. 4500 சம்பளமாக பெறு கிறார். அந்த வகையில் அவர் மாதம் ரூ. 40 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்.

நாயை வாக்கிங் அழைத்து சென்று மாதம் ரூ.40 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கும் அவரை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.