Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

'கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை!' -சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசம்


 கச்சத்தீவு குறித்து பேச தி.மு.க.,வுக்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம்  நடைபெற்று வருகிறது.

இதில், தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, " தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக. தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமு.க. தான்.

கச்சத்தீவு குறித்த பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், தி.மு.க. தன்னை இணைத்துக் கொள்ளாதது ஏன்? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கச்சத்தீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்துக் கொள்ளப்பட்டது" என்றார் ஆவேசமாக.

இதற்கு பதிலளித்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ''கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974 ம் ஆண்டு, அப்போதய பிரதமர் இந்திரா காந்திக்கு முதல்வராக இருந்த கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.