Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 29, 2016

61 பேரை பலி கொண்ட மவுலிவாக்கம்... மற்றொரு 11 மாடி கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது!


இடிந்து விழுந்து 61 பேரை காவு வாங்கிய சென்னை மவுலிவாக்கம் கட்டடத்தின் அருகில் இருக்கும் மற்றொரு கட்டடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகில் இருந்த மற்றொரு கட்டடமான, 'ஏ பிளாக்' கட்டடத்தையும் இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


இதையடுத்து, அதே நிறுவனம் சார்பில் இடிந்த கட்டடம் அருகே கட்டப்பட்டு வந்த இரண்டாவது கட்டடத்தை இடிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து, அந்த நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் எம்.பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.


இந்த வழக்கில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், அந்த கட்டடத்தை இடிக்க கடந்த மே 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அக்கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று (28 ம் தேதி) தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக கட்டடத்தில் வெடி பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிந்ததும் கட்டடம் 3 வாரத்திற்குள் தரை மட்டமாகிவிடும் என சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கட்டடம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளதை தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.