Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

உடை சரியில்லை எனக் கூறி தெருவோர சிறுவர்களுக்கு உணவளிக்க மறுத்த உணவகம்


டெல்லியில் தன்னுட‌ன் வந்த தெருவோர சிறுவர்களுக்கு உணவு பரிமாற மறுத்த உணவகத்தை கண்டித்து பெண்‌ ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சோனாலி செட்டி என்ற பெண், அவருடை‌ய கணவரின் பி‌றந்தநாளையொட்டி சாலையோரம் வசிக்கும் ஏழை சிறுவர் சிறுமியருக்கு விருந்த அளிக்க திட்டமிட்டுள்ளார். சில சிறுவர்களை அழைத்து கொண்டு ஒரு உ‌ணவகத்திற்கு சென்ற போது முறையாக உடை அணியவில்லை என கூறி உணவக பணியாளர்கள் சிறுவர் சிறுமியருக்கு உணவு பரிமாற மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திர‌‌மட‌ந்த சோனாலி உணவகம் முன்பு நின்று கூச்சலிட்டதால் சலச‌லப்பு ஏற்பட்டது.‌‌இதனிடையே தங்களின் செயலில் தவறேதும் இல்லை என உணவக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. எனினும் குற்றச்சாட்டு‌ நிரூபணம் ஆனால் உரிமம் ‌ரத்து செய்யப்படும் என டெல்‌‌லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.