Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

போதையில் எமனான மாணவன்; 2 பேர் பலி


டில்லியில், கல்லுாரி மாணவன் குடிபோதையில் ஓட்டிச் சென்ற கார் மோதி, இரண்டு பேர் பலியாகினர்; ஒருவர் படுகாயமடைந்தார்.


இந்த சம்பவம், டில்லியின் ஜனக்புரி பகுதியில், நேற்று முன்தினம்(ஜூன் 13) அதிகாலையில் நடந்துள்ளது. ஜனக்புரியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ரிஷப், 21. கல்லுாரி மாணவனான இவன், தந்தையின் விலை உயர்ந்த காரில், 100 கி.மீ., வேகத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் சென்றான்.

1.5 கி.மீ., துாரத்துக்குள், சாலையில் சென்ற மூன்று பேர் மீது ஒருவர் பின் ஒருவராக வரிசையாக மோதினான். இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் மீது மோதிய பின்னும் நிற்காமல் சென்ற காரை, ரோந்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தன் நண்பர்களுடன் இரவு முழுவதும் குடித்துவிட்டு, காலையில் வீடு திரும்பும் போது இந்த விபத்தை ரிஷப் ஏற்படுத்தியுள்ளான். காரை நிறுத்திய போதும் ரிஷபால் நிற்கக் கூடிய முடியவில்லை என, போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மாணவன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.